‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் – பிரபாஸ் காம்போவில் ‘சலார்’… சூப்பரான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர்!
February 9, 2021 / 11:27 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கான பூஜை கடந்த ஜனவரி 15-ஆம் தேதி போடப்பட்டது.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, முதல் ஷெடியூல் ஷூட்டிங் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். இந்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
சமீபத்தில், இந்த படத்தின் செம்ம மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். இந்த செம்ம மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மது குருசுவாமி நடித்து வருகிறார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.