நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை !

இந்திய சினிமாவில் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம் . தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை வைத்துள்ளார் மேலும் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது .விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது . இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது . இந்நிலையில் நடிகர் விக்ரம் அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் . ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் .

வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரம் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்களின் மேனேஜர் மற்றும் நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரம் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியீட்டுள்ளனர் . அதில் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு இல்லை என்றும் லேசான நெஞ்சு வலி தான் என்றும் மக்களுக்கு தெரிவித்து இருக்கிறார்கள் . நடிகர் விக்ரம் தற்போது நலமுடன் இருக்கிறார் ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர் .

Share.