துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாகும் – கௌதம் வாசுதேவ் மேனன்
June 11, 2020 / 04:32 PM IST
|Follow Us
தமிழ் சினிமா ரசிகர்கள் பல நாட்கள் காத்திருந்த துருவநட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் நேரலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டு துருவநட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற செய்தி வெளியாகி இருந்தது. தொடக்கம் முதலே பல காரணங்களால் இந்தப் படப்பிடிப்பு தடைபட்டுக் கொண்டே இருந்தது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த படத்தில், முதலில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் பின் அவர்களுக்கு இடையில் இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.
பின் 2016ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. அது சில பணதட்டுப்பாடு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு வைத்து, 2018 ஆம் ஆண்டில் டீஸர் ஒன்றை இந்த படக்குழு வெளியிட்டது. இந்தப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரீது வர்மா நடித்துள்ளார்.இந்த படத்தை தற்போது வேல்ஸ் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் தயாரிக்கிறது.
இவ்வளவு தடைகளை மீறி வந்த இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது நடப்பதாகவும் இந்த லாக்டோன் முடிந்ததும் முழுமையாக இந்த படம் முடிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் இந்தப் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.