இந்தியில் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து அவர் கடைசியாக நடித்த “தில் பச்சாரா” எனும் திரைப்படத்தை விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட போவதாக தகவல்கள் வந்தது. இதை உறுதி செய்து ஹாட்ஸ்டார் வருகிற ஜூலை 24ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிடப் போவதாக செய்தி வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று இந்தப் படத்தின் ட்ரெய்லரை யூட்யூபில் வெளியிட்டார்கள். தில் பச்சாரா ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திலேயே அதிக லைக்குகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் மார்வல் படமான அவெஞ்சர்ஸ் ட்ரெய்லர் தான் கடைசியாக அதிக லைக்குகளை யூடியூபில் பெற்றது. தற்போது அதை முறியடித்து “தில் பச்சாரா” ட்ரெய்லர் சுமார் 5 மில்லியன் லைக்குகளையும் 22 மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இது புதிய உலக சாதனையாகும்.
இந்த ட்ரெய்லர் வெளியான போதே இதை உலக சாதனையாக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள். அவர்கள் நினைத்த மாதிரியே தற்போது இந்த ட்ரெய்லர் உலக சாதனை படைத்துள்ளது.
முகேஷ் சப்ரா இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் மறைந்த சுஷாந்த்சிங் ராஜ்புதுடன் சஞ்சனா சாங்கி மற்றும் சாயப் அலிகான் நடித்துள்ளார்கள். “த ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” ஆங்கில நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மறைந்தும் அவரது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பது இந்த படத்தின் டிரைலர் உலக சாதனை புரிந்ததிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.