மனதை நெகிழ வைத்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதிச்சடங்கு!
June 16, 2020 / 01:15 PM IST
|Follow Us
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், ஞாயிற்றுக்கிழமை காலை மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறுதிச் சடங்கு மும்பையில் உள்ள பவன் ஹன்ஸ் கிரிமடோரியத்தில் நடைபெற்றது.
பல பாலிவுட் பிரபலங்கள் இவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
சுஷாந்த் சிங்குடன் “கை போ சே” படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் இவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
“கிஸ் தேஷ் மெய்ன் ஹை மேரா தில்” என்ற சீரியலில் சுஷாந்துடன் பணிபுரிந்த கிறிஸ்டல் டிசோசாவும் இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.
கடைசியாக அவருக்கு வெளிவந்த திரைப்படம் “சிச்சோர்” இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா கபூரும் இவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
4. மேலும் “சிச்சோரில் “அவருடன் நடித்த வருன் ஷர்மாவும் சுஷாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.
5. “ரப்தா”என்ற படத்தில் பிரசாந்துடன் நடித்த கிரித்தி சனோன் இவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.
6. இவரை “கை போ சே” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் அபிஷேக் கபூர் அவரது மனைவி பிரக்யா கபூருடன் சேர்ந்து இறுதி சடங்கில் கலந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவேக் ஓப்ராய், ரன்வீர் ஷோரே, உதித் நாராயண் மற்றும் பிரியா சக்கரபர்த்தி ஆகிய பல பாலிவுட் பிரபலங்கள் சுஷாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.