துருவ்வை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

இதுவரை தமிழ் படங்களில் ஒரு கேரக்டர் அல்லது இரண்டு கேரக்டர்கள் கால்ஷீட் பிரச்சனை அல்லது இயக்குநருக்கும் நடிகருக்கும் கருத்து வேறுபாடு என விலகுவதற்கு காரணம் இருக்கும். ஆனால், ஒரு முழு படமும் எடுக்கப்பட்டு அப்படியே அதை ரிலீஸ் செய்ய வேண்டாம் என ஒதுக்கி வைத்து விட்டு, அதில் நடித்த ஹீரோவை மட்டும் வைத்து இன்னொரு முறை படத்தை எடுக்கப்போறோம்னு சொன்னபோதே அதிர்ச்சியானது திரையுலகம்.

இத்தனைக்கும் இது வேறு மொழியில் ஹிட்டடித்த ஒரு ரீமேக் படம் தான். அந்த ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கு படம் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்ட வெர்ஷன்கள் ‘வர்மா’ மற்றும் ‘ஆதித்ய வர்மா’. இவ்விரண்டு வெர்ஷன்களிலும் ஹீரோவாக நடித்தவர் விக்ரமின் மகன் துருவ். இதில் இரண்டாவது எடுக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ கடந்த 2019-யில் ரிலீஸானது.

முதலில் எடுக்கப்பட்ட ‘வர்மா’வின் இயக்குநர் பாலா. இதில் துருவ்வுக்கு ஜோடியாக மேகா நடித்திருந்தார். இந்நிலையில், இந்த முதல் வெர்ஷன் (வர்மா) இன்று (அக்டோபர் 6-ஆம் தேதி) OTT ப்ளாட்ஃபார்ம்மான ‘சிம்ப்ளி சவுத்’-யில் ரிலீஸாகியுள்ளது. இப்போது இந்த படத்தை ‘சிம்ப்ளி சவுத்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.