மனைவியை விவாகரத்து செய்த பிரபல இயக்குநர் பாலா!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. அது தான் ‘சேது’. இதில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியவர் விக்ரம். ‘சேது’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார்’ ஆகிய படங்களை இயக்கினார் பாலா.

சமீபத்தில், இவர் இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் OTT-யில் ரிலீஸானது. தற்போது, பாலாவின் புதிய படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிக்கவிருக்கிறார். இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் 18-ஆம் தேதி முதல் மதுரையில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

2004-ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இயக்குநர் பாலா. இவர்களுக்கு பிரார்த்தனா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து விட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது.

Share.