2 மொழிகளில் தயாராகும் படம்… பிரபல தெலுங்கு ஹீரோவுடன் கூட்டணி அமைக்கும் லிங்குசாமி!
February 18, 2021 / 11:37 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கிய கடைசி படமான ‘சண்டக்கோழி 2’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.
தற்போது, இயக்குநர் லிங்குசாமி இயக்க உள்ள புதிய படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ராம் போதினேனி நடிக்க உள்ளாராம். இந்த தகவலை இயக்குநர் லிங்குசாமி மற்றும் நடிகர் ராம் போதினேனி இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளனர்.
இப்படம் நடிகர் ராம் போதினேனியின் கேரியரில் 19-வது படமாம். இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம். இதனை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இப்போது, இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.