பொன்னியின் செல்வன் குறித்த புது ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் மணிரத்தினம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.

இந்த படத்தை மணிரத்னம் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். ஏற்கனவே தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இரு பாகங்களாக இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்படியிருக்க முதல் பாகம் தீபாவளி 2021 அன்று வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தில் ஒரு பாடலை எழுத்தாளர் வெண்பா கீதாயன் எழுதியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் உள்ள இதர பாடல்களை யார் எழுதினார்கள் என்பதை பற்றிய செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.