முதன் முதலாக இணையும் பிரபலங்கள் !

கோலிவுட் இயக்குனர் மோகன் ராஜா தற்போது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான , ‘காட்பாதர்’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், பிரபல நடன இயக்குனர் பிரபுதேவா இப்படத்தில் பணிபுரிந்துள்ளதாகவும், முதன்முறையாக பிரபுதேவாவுடன் பணிபுரிந்ததில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர் மோகன் ராஜா, “இன்று மிகவும் சிறப்பு வாய்ந்தது. முதல் முறையாக பிரபுதேவாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார் மோகன் .


பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார், இதில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சத்யதேவ் காஞ்சரனா, கங்கவ்வா, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் , சல்மான் கான் தெலுங்கு படத்தில் முதன் முதலில் தோன்ற உள்ளார் எஸ் தமன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Share.