இயக்குனர் ராம் படத்தின் புதிய அப்டேட்!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மாநாடு . இந்த படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது . இந்த படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி . நடிகர் சிம்புவை வைத்து படம் தயாரிக்க பலரும் தயாரிக்க யோசித்த நிலையில் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து அதில் சிம்புவை நடிக்க வைத்து வென்று காட்டியவர் சுரேஷ் காமாட்சி .

மாநாடு படத்திற்கு பிறகு சுரேஷ் காமாட்சி நடிகர் நிவின் பாலி நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கும் படத்தை தயாரிப்பது அறிவித்தார் சுரேஷ் காமாட்சி .இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் நடிகை அஞ்சலி , நடிகர் சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

வெகு நாட்களாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்து உள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார் . மேலும் நடிகர் சூரி “ஒரு மனிதனின் வாழ்க்கையில் தனது ரயில் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதேபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் நேற்றோடு நிறைவடைந்தது..பிரியாவிடை பெறுகிறேன்… ” என்று ட்வீட் செய்துள்ளார் .

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பேரன்பு . இந்நிலையில் அவரின் இந்த படத்திற்கு ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் . விரைவில் இந்த படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Share.