துணிவு படத்தின் இரண்டாவது பாடலை பாடிய பாடகர் யார் தெரியுமா ?
November 13, 2022 / 11:17 AM IST
|Follow Us
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .
2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்க படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . தற்போது டப்பிங் பணிகள் விரைவாக நடந்து வருகிறது . நடிகர் அஜித் தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார் .
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது . துணிவு படத்தின் முதல் பாடல் பற்றின தகவல் வெளியாகி உள்ளது . ஜிப்ரான் இசையில் ” சில்லா சில்லா ” என்கிற பாடலை அனிருத் பாடியுள்ளார் . இந்த பாடலை வைசாக் என்பவர் எழுதி உள்ளார் . சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘ காக்கா கதை ‘ பாடலை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இது ஒரு பக்கம் இருக்க துணிவு படத்தின் அடுத்த பாடல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது . இந்த பாடலை ஹிப்ஹாப் ஆதி பாடியுள்ளார் என்றும் இது ஒரு ராப் பாடல் என்றும் கூறப்படுகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.