படத்தில் தன்னுடைய போட்டோவை பயன்படுத்தி தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக பத்திரிக்கையாள பெண் ஒருவர் துல்கர் மீது புகார் அளித்துள்ளார்.
வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் துல்கர் சல்மான். மம்முட்டி மகனாக இருந்தாலும், அவரின் எந்த சிபாரிசும் இல்லாமல் மலையாளத்தில் முன்னணி நடிகராக அவர் திகழ்ந்து இருக்கிறார். துல்கர் நடிப்பில் ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்தை அனுப் சத்யன் இயக்கி இருந்தார், படமும் நன்றாக கலெக்சனானது.
இந்நிலையில் பத்திரிகையாளரான சேத்னா கபூர் என்பவர் தனது புகைப்படத்தை அனுமதி பெறாமல் துல்கர் நடித்த படத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் புகைப்படத்தை வைத்து உருவ கேலி செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
We take full responsibility for the error on our behalf. Will look into it with concerned departments of the film to understand how the images were sourced. I apologise from my end and from the film as well as @DQsWayfarerFilm for any difficulties caused. It wasnt intentional.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துல்கர் சல்மான், “இந்த புகைப்படம் உள்நோக்கத்தோடு பயன்படுத்தவில்லை. இந்த போட்டோ எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை விசாரிக்கிறோம். உங்களுக்கு உருவாகியுள்ள தர்மசங்கடமான நிலைமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு சம்பந்தப்பட்ட அந்த பத்திரிக்கையாளர் எந்த பதிலும் கூறவில்லை. இந்த படத்தில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர்.