நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து பேசிய ‘ஈரம்’ ஆதி… தீயாய் பரவும் ஸ்டில்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தை ‘ஈரம்’ புகழ் ஆதி நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.