ரஜினிகாந்தை இந்த அளவிற்கு உயர்த்தி விட்டு அதன் பின் காணாமல் போன அந்த நிர்மலா பற்றி உங்களுக்கு தெரியுமா…?
இது ஒரு காதல் கதை….. அப்போது ரஜினி கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக இருந்தார். ஒருநாள் பணியில் இளம்பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ரஜினிகாந்த் அவரை திட்டியுள்ளார். பதிலுக்கு அந்த பெண்ணும் இவரை திட்டியுள்ளார். மோதலில் ஏற்பட்ட சந்திப்பு காதலில் முடிவது தானே எழுதப்படாத சட்டம். அதன்படியே இவர்களின் மோதலும் காதலில் முடிந்தது. அப்போதே நாடகத்தில் நடிக்கும் பழக்கம் கொண்ட ரஜினி, நிர்மலாவை (அந்த இளம்பெண்ணின் பெயர்) நாடகம் பார்க்க ஒருநாள் அழைத்துள்ளார். அவருடன் சென்ற நிர்மலா, நாடகம் பற்றி எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு செல்ல. சில நாட்களிலேயே அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து ரஜினிக்கு கடிதம் வந்துள்ளது.
தான் ஏதும் விண்ணப்பிக்காத நிலையில், யார் இதனை செய்தது என்று ரஜினி குழம்ப, நிர்மலா தான் அதனை செய்தது என ஒருவழியாக அவர் கண்டுபிடித்தார். ரஜினியின் நடிப்பை பார்த்து பிரமித்த நிர்மலா, வருங்காலத்தில் நீங்கள் பெரிய நடிகராக வேண்டும், இந்திய அளவில் புகழ்பெற வேண்டும் என்பதால் இவ்வாறு விண்ணிப்பித்தேன் எனக்கூறியுள்ளார். ஆனால் கையில் காசு இல்லாததால், பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்வது குறித்து ரஜினி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மருத்துவ மாணவியான நிர்மலாவே பணத்தை ஏற்பாடு செய்து ரஜினியை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போதெல்லாம் கடித போக்குவரத்து மட்டும்தான் என்பதால், ஒரு கட்டத்தில் இருவரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. பெங்களூரு சென்ற ரஜினி,நிர்மலாவை சல்லடை போட்டு தேடியுள்ளார். ஆனால் நிர்மலா கிடைக்கவில்லை.
அதன்பின் ரஜினி திரைத்துறையில் நுழைந்து சூப்பர்ஸ்டார் ஆனது தனி வரலாறு, ஆனால் இன்றும் அவர் தன்னுடைய நிம்மியை தேடி கொண்டிருக்கிறார், இமயமலையோ, அமெரிக்காவோ, உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நிம்மியை பார்த்து விடமாட்டோமா என்று தான் அவரின் கண்கள் அலைபாயும். சரி, ரஜினியின் இந்த தேவ ரகசியம் எப்படி வெளியுலகிற்கு தெரிந்தது என்று கேட்கிறீர்களா,..? எல்லாம் தேவனால தான். அட ஆமாங்க நம்ம பாட்ஷா வில்லன் தேவன் தான் இந்த ரகசியத்தை வெளியிட்டார். பாட்ஷா படப்பிடிப்பில் தேவனிடம் ரஜினி இதனை கூறியுள்ளார். சொன்னதோடு நில்லாமல் தேவனை கட்டிப்பிடித்து நிர்மலாவை நினைத்து “அவர் ஏன் என்னை பார்க்க வரவில்லை” என அழுதும் உள்ளார்”. என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கே காதல் தோல்வியா…!