தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபு இயக்கத்தில் ஹாட்ஸ்டாரில் ஒரு ஹாரர் சீரிஸ் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸில் நடிகர் வைபவ், காஜல் அகர்வால், ஆனந்தி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
2. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற தீபாவளியன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று திரைப்படக் குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் புரோடக்சன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஊர்வசி மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்கள்.
3. தமன்னாவின் திரைப்படம்!
பிரபல இயக்குனர் மற்றும் ஆக்டிவிஸ்ட்டான ராம் சுப்ரமணியம் இயக்கத்தில் தமன்னா மற்றும் ஜி.எம்.குமார் நடிப்பில் உருவாகி வரும் “நவம்பர் ஸ்டோரி” என்ற திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ளது.
4. சத்யராஜின் திரைப்படம்!
ஹாட்ஸ்டாரில் விரைவில் நடிகர் சத்யராஜ் மற்றும் சீதா நடிப்பில் “மை பர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்” என்ற சீரிஸ் வெளிவரவுள்ளது. இந்த சீரிஸில் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித் மற்றும் நடிகர் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
5. கார்த்திக் சுப்புராஜின் திரைப்படம்!
தமிழில் தற்போது முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய், வாணிபோஜன், விவேக் பிரசன்னா, ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பில் ‘ட்ரிபிள்ஸ்’ என்ற திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
வரிசையாக ஹாட்ஸ்டார் எனும் ஓடிடி தளத்தில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்சிரீஸ்கள் வெளியாகவுள்ளது. இவை எப்போது வெளியாகும் என்பதற்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.