நிர்வாண புகைப்படத்தை ஷேர் செய்ய சொன்ன ரசிகர்… பொளேர் பதிலடி கொடுத்த ப்ரியாமணி!
March 31, 2021 / 02:42 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியாமணி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கத்தில் தான். அது தான் ‘கண்களால் கைது செய்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ப்ரியாமணிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என படங்கள் குவிந்தது. ப்ரியாமணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2017-ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ப்ரியாமணி.
இப்போது ப்ரியாமணி நடிப்பில் தெலுங்கில் ‘விரத பருவம், நாரப்பா’, ஹிந்தியில் ‘மைதான்’, தமிழில் ‘கொட்டேஷன் கேங்’, ‘சயனைடு’ (தமிழ் / தெலுங்கு / கன்னடம் / மலையாளம் / ஹிந்தி), ‘Dr.56’ (தமிழ் / கன்னடம்) என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டிருந்தார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்த ரசிகர் ஒருவர் “என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று கமென்ட் போட்டுள்ளார்.
அதற்கு ப்ரியாமணி “என் கணவர் ஓகே சொன்னால், நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று பதில் கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் “உங்களது நிர்வாண புகைப்படத்தை ஷேர் செய்யுங்கள்” என்று கமென்ட் போட்டுள்ளார். அதற்கு ப்ரியாமணி “முதலில் உங்களது அம்மா மற்றும் சகோதரியிடம் அவர்களின் நிர்வாண புகைப்படத்தை ஷேர் செய்ய சொல்லுங்கள். அவர்கள் ஷேர் செய்த பிறகு நானும் ஷேர் செய்கிறேன்” என்று பதில் கூறியுள்ளார். பின், அந்த ரசிகர் “sorry மேடம்” என்று தெரிவித்துள்ளார்.