கனடா நாட்டில் முதல் முறையாக கொரோனா குறித்த திரைப்படம் வெளியாகியுள்ளது. சீன மக்கள் மீதான அச்சம் மற்றும் அவர்களது கலாச்சாரம் குறித்த பயம் குறித்து மனோரீதியாக அலசுகிறது இந்த படம்.
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனைவரும் வெறுக்கும் ஒரு வார்த்தை கொரோனா தான். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா என்றாலே மக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். ஏன்.. டிரம்பிற்கே இந்த நிலை தான். காரணம் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மரணங்கள், இதை பார்த்து மக்கள் ஏன் பயப்படுகிறார்கள், அவர்களின் மனநிலை என உளவியல் ரீதியாக ஆராய்ந்து விளக்குகிறது இந்த படம். மருத்துவ ரீதியாக கூறினால், ஜீனோபோபியா எனும் அந்நியர்கள் மற்றும் அந்நியக் கலாசாரங்கள் மீதான அச்சம் அல்லது வெறுப்பு, இதுகுறித்து விலக்குகிறது இந்த படம்.
டிசம்பர் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த கொரோனா குறித்து, கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் மொஸ்டபா கேஸ்வரி ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கி, அதனை 2 வாரத்தில் முடித்துள்ளார்.மேலும் 10 நாள்களில் ஒரு வாடகை இடத்தில் செட் அமைத்து படத்தையும் அவர் இயக்கி முடித்திருக்கிறார். FEAR IS A VIRUS என்ற வாசகத்துடன், இதன் டிரெய்லர் சென்ற மாதம் வெளியானது. ஒரே ஒரு ரூமில் மொத்த படத்தையும் இயக்கி இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக இந்த படத்தை சிங்கிள் ஷாட் முறையில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த முறையில் தான் ரா.பார்த்திபன் இரவில் நிழல் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபரால் “சீன வைரஸ்’ என ஆரம்பகாலத்தில் குறிப்பிடப்பட்ட `கொரோனா’ வைரஸுக்கு சீனர்களும் பலியாகி வரும் நிலையில், மரணத்திலும் ஒரு நாட்டின் மீது பழிப்போடுவது தவறு என்கிறது இந்த படம்.