அந்த மாதிரி விளம்பரங்களில் நடிக்க மறுத்த ஜி. வி. பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஜி. வி. பிரகாஷ் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனிடையே தற்போது ஆன்லைன் ரம்மி கேம் சூதாட்டம் வைரலாகி வரும் நிலையில், இந்த கேமினை விளம்பரம் படுத்த , பிரபல நடிகர்களான பிரேம்ஜி, ரெஜினா கேசன்ட்ரா ,பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து மக்களிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்து கொள்கின்றனர். இதனிடையில் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய ஜிவி பிரகாஷ், எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆன்லைன் ரம்மி கேம் போன்ற சூதாட்ட விளையாட்டிற்கு நான் விளம்பரம் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜி. வி. பிரகாஷின் இந்த முடிவு பலரால் பாராட்டபட்டு வருகிறது. ஜி. வி. பிரகாஷின் இந்த முடிவை மற்ற நடிகர்கள் பின்பற்றுவார்களா என்பது கேள்வி குறி தான்.

Share.