விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் வருமா ?

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா . இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து இருந்தார் , ஏ .ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . 2010-ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது . இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .இந்த படத்தில் இருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து கௌதம் ,சிம்பு, ரஹ்மான் கூட்டணியில் உருவான படம் அச்சம் என்பது மடமையடா இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் வைரலாகி இணையத்தை கலக்கியது . அதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் தற்பொழுது வெந்து தணிந்தது காடு என்கிற படம் உருவாகி வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது . கடந்த 6ஆம் தேதி இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியானது .

இந்நிலையில் இயக்குனர் கவுதம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் விண்ணை தண்டி வருவாயா 2 படத்தினை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த கவுதம் விண்ணைத்தாண்டி வருவாயா-2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார் .

கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்று ஒரு குறும்படத்தை எடுத்துள்ளேன். இது அப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் சிம்பு ரசிகர்கள் அனைவரும் கார்த்திக் மற்றும் ஜெசியை திரும்ப திரையில் காண ஆவலுடன் இருக்கிறார்கள் .

Share.