‘குட் டே’ பிஸ்கட்டிற்கான விளம்பர படத்தில் கெளதம் மேனன் – ஆர்.ஜே.பாலாஜி… வைரலாகும் 2 வீடியோஸ்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். இப்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவின் ‘நவரசா’ என்ற வெப் சீரிஸும், சிலம்பரசனின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’, வருணின் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இது தவிர கெளதம் மேனன் நடிப்பில் சூரியின் ‘விடுதலை’, சிலம்பரசனின் ‘பத்து தல’, சாண்டியின் ‘3 : 33’, ரிச்சர்ட் ரிஷியின் ‘ருத்ர தாண்டவம்’ என நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் ‘குட் டே’ பிஸ்கட்டிற்கான விளம்பர படத்தில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Gautham Menon Rj Balaji Acted In Good Day Ad1

இந்த விளம்பர படத்தில் இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளாராம். ‘குட் டே’ பிஸ்கட்டிற்கான இரண்டு விளம்பர படங்களும் இன்று வெளியாகியுள்ளது. இதில் கெளதம் மேனன் ஆர்.ஜே.பாலாஜி மாதிரியும், ஆர்.ஜே.பாலாஜி கெளதம் மேனன் மாதிரியும் பேசியுள்ளனர். இவ்விரண்டு விளம்பர படங்களும் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Share.