அஜித்துக்கு ஆசீர்வாதம் வழங்கிய பாட்டி ! வைரலாகும் வீடியோ !
November 1, 2022 / 06:54 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .
இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆக்ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தின் தலைப்பு ” துணிவு ” என்று படக்குழு அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர் . இந்நிலையில் நடிகர் அஜித் நடித்து வந்த தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 11 முடிந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது .
இந்நிலையில் துணிவு படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் தமிழ்நாட்டின் திரையரங்கு உரிமையை வாங்கி உள்ளது என்ற தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அந்த நிறுவனம் . மேலும் பொங்கல் 2023 வெளியிடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் அஜித்தை ஒரு பாட்டி ஆசிர்வாதம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அஜித் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .