வசந்த பாலன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜெயில்’… டீசரை வெளியிட்ட தனுஷ்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்த பாலன். இவர் ‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இப்போது வசந்த பாலன் இயக்கத்தில் ‘ஜெயில்’ மற்றும் ‘அநீதி’ என இரண்டு தமிழ் படங்கள் தயாராகி வருகிறது.

இதில் ‘அநீதி’ படத்தில் ஹீரோவாக ‘கைதி’ படம் மூலம் ஃபேமஸான அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இன்னொரு படமான ‘ஜெயில்’-யில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.

‘க்ரைகெஸ் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மிக விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறார். இந்நிலையில், இன்று (அக்டோபர் 27-ஆம் தேதி) இப்படத்தின் டீசரை டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.