ஜி.வி.பிரகாஷ்குமார் & சைந்தவியின் மகள் புகைப்படம்!
July 23, 2020 / 07:37 PM IST
|Follow Us
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ்குமார், 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான “வெயில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
பின்பு பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, தலைவா, ராஜா ராணி, தெறி, அசுரன் போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்பு நடிகராகவும் உருவெடுத்தார்.
இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “டார்லிங்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது ஐயங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே படங்களில் நடித்துள்ள இவர், ஜெயில், 4ஜி, காதலைத் தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் இசையமைப்பில் “சூரரைப்போற்று” திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
இவர் 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுவரை தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத இந்த ஜோடி, தற்போது சைந்தவி தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.