டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம்… தோழிகளுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்ஷிகா!
November 28, 2022 / 11:45 PM IST
|Follow Us
திரையுலகில் நுழைந்தவுடனே அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பும், ரசிகர்களின் லைக்ஸும் குவிப்பது என்பது எல்லோராலும் சாதித்து விட முடியாது. அந்த சாதனையை அசால்ட்டாக செய்து காட்டியவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஹன்ஷிகா, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஹன்ஷிகாவாக அவதாரம் எடுத்தார்.
பின், ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சூப்பர் ஹிட்டானதும், அடித்தது ஜாக்பாட். ஹன்ஷிகா மோத்வானியின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்ஷிகா மோத்வானிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இப்போது ஹன்ஷிகா நடிப்பில் தமிழ் மொழியில் ‘பாட்னர், ரவுடி பேபி’, இயக்குநர் ஆர்.கண்ணன் படம், இயக்குநர் விஜய் சந்தர் படம் மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், ஹன்ஷிகா தனது நீண்ட கால நண்பரும், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ‘Mundota’ அரண்மனையில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், ஹன்ஷிகா தனது தோழிகளுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.