வெளியானது ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண நிகழ்ச்சியின் ட்ரெய்லர்!
February 7, 2023 / 11:56 AM IST
|Follow Us
திரையுலகில் நுழைந்தவுடனே அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பும், ரசிகர்களின் லைக்ஸும் குவிப்பது என்பது எல்லோராலும் சாதித்து விட முடியாது. அந்த சாதனையை அசால்ட்டாக செய்து காட்டியவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஹன்ஷிகா, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஹன்ஷிகாவாக அவதாரம் எடுத்தார்.
பின், ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சூப்பர் ஹிட்டானதும், அடித்தது ஜாக்பாட். ஹன்ஷிகா மோத்வானியின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்ஷிகா மோத்வானிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இப்போது ஹன்ஷிகா நடிப்பில் தமிழ் மொழியில் ‘பாட்னர், ரவுடி பேபி, காந்தாரி, கார்டியன்’ மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ஹன்ஷிகா தனது நீண்ட கால நண்பரும், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே, இவர்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை பிரபல OTT நிறுவனமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ வாங்கியிருந்தது. தற்போது, ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ நிறுவனம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி ஹன்ஷிகாவின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று குறிப்பிட்டு ஒரு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.
Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.