ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் நடிகர் ஆதி சமீபத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தன் இசையமைப்பின் மூலமாக கால்பதித்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதைத்தொடர்ந்து அவர் தன் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தற்போது நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இவர் நடித்து இயக்கிய “மீசையமுறுக்கு”, பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளிவந்த ” நட்பே துணை”உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் ராணா இயக்கத்தில் வெளிவந்த “நான் சிரித்தால்”படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கோபிசெட்டிபாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு #தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான புரிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிப் ஹாப் ஆதியின் இந்த கலந்துரையாடலுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.