அடேங்கப்பா… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
December 13, 2021 / 02:36 PM IST
|Follow Us
‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற ஆல்பம் மூலம் ஃபேமஸான ஆதியின் இசைக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனால் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் ஆதி. ‘ஆம்பள’ படத்தில் இருந்து ஆரம்பித்த இவரது இசை பயணம் ‘இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, கவண், கலகலப்பு 2, இமைக்கா நொடிகள், வந்தா ராஜாவாதான் வருவேன், Mr.லோக்கல், கோமாளி, ஆக்ஷன்’ என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ஹீரோவாகவும் மாஸ் காட்டிய படம் ‘மீசைய முறுக்கு’. இதில் ஹைலைட் என்னெவென்றால், இப்படத்தின் இயக்குநரும் இவரே தான். இந்த படத்துக்கு பிறகு நடிகர் ஆதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம்’ என படங்கள் குவிந்தது.
இப்போது, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் ‘அன்பறிவு’ மற்றும் இயக்குநர் ARK சரவன் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘அன்பறிவு’ திரைப்படம் மிக விரைவில் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் ரிலீஸாகவுள்ளதாம். இந்நிலையில், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.