‘வலிமை’யில் ஹூமா குரேஷி ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த தெலுங்கு நடிகையா?
March 2, 2022 / 09:11 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம்.
இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஹூமா குரேஷி ஒப்பந்தமாவதற்கு முன்பு இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் ஹெச்.வினோத் பிரபல தெலுங்கு நடிகை இலியானாவை அணுகினார் என தகவல் கிடைத்துள்ளது. பின், சில காரணங்களால் இலியானாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus