இன்ஸ்ட்டாகிராம் நேரலையில் கலந்துரையாடிய உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!
கமல்ஹாசன் தனது படங்களில் பல நட்சத்திரங்களுடன் இணைவதைக் கண்டு களித்து இருக்கிறோம், மேலும் அவர் ஒப்பிடமுடியாத சில திரைப்படங்களையும் வழங்கியுள்ளார். லாக்டவுன் சமயத்தில் படப்பிடிப்பு இல்லாத இந்த நேரத்தில் நடிகர்கள் ஒருவரை ஒருவர் வீடியோ காலில் பார்த்து பேசி மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
அதேபோல் தான் தற்போது இளம் நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வீடியோ கால் செய்து நலம் விசாரித்தார். தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் நடந்த நேரலையில் கமலிடம் VJS பல கேள்விகளை கேட்க, அதற்கு கமல்ஹாசன் சுவாரஸ்யமாக பதிலளித்தார் கமல்ஹாசன். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து இதுவரை தெரிந்திராத பல சுவாரஸ்ய விஷயங்களை விஜய்சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டார். சிவாஜி கணேசன் விமானம் ஏற பயந்தது குறித்தும், தங்கச்சுரங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் பனியில் நடித்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
அப்போது விஜய் சேதுபதி தான் அடுத்து என்ன செய்யப் போவது என்று தெரியாமலிருக்க, உடனே எதிர்முனையில் இருக்கும் கமல் ஹாசன், “தைரியமா அடுத்தகட்டத்துக்கு போங்க நாங்க கைதட்டி விசில் அடிக்கிறோம் உங்களுக்கு” என்று நம்பிக்கையூட்டினர். இறுதியாக மக்கள் நீதி மய்யத்திற்கு ஏன் அந்த பெயரை வைத்தீர்கள் என்ற விஜய்சேதுபதியின் கேள்விக்கு மய்யம் தனக்கு மிகவும் பிடித்த சொல் என்றும், கம்யூனிசம் போன்ற ஒரு நடு நிலையான சொல்லை தன் கட்சிக்கு வைக்க வேண்டும் என சிந்தித்தே அந்த பெயரை வைத்ததாக கூறியுள்ளார்.
சினிமாவில் முன்னோடியாக திகழ்ந்து, சினிமாவிற்கு எவ்வாறு தம்மை நேர்மையாக அர்ப்பணிக்க வேண்டும் என்று எங்களுக்கு வழிகாட்டிய கமல்ஹாசன், அரசியலில் வருவது வரவேற்கத்தக்கது என நடிகர் விஜய்சேதுபதி வாழ்த்து தெரிவித்திருந்தார். நேரலையின் முடிவில் மருதநாயகம் பற்றியா கேள்விக்கு பதிலளித்த கமல் அந்த படத்தை முடிப்பதற்கு நிறைய பணம் தேவை படும். நிறைய பணம் இருந்தால் மட்டுமே அந்த படம் உருவாகும். அப்படியே உருவானாலும் அதில் உள்ள மருதநாயகத்தின் வயது 40, அதனால் என்னால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியாது. வேறு நாயகனை வைத்து தான் எடுக்க வேண்டும்” என்று கூறினார்.