விஜய்சேதுபதியா? விக்ரமா?

தீனா , ரமணா , கஜினி , துப்பாக்கி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் A.R.முருகதாஸ் . கத்தி படத்திற்கு பிறகு இவர் இயக்கிய ஸ்பைடர் , சர்கார் , தர்பார் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க போவதாக தகவல் வெளியாகின . ஆனால் அந்த கதையை விஜய் விரும்பாத காரணத்தால் அந்த படம் தொடங்காமல் போனது.

இதனை தொடர்ந்து இயக்குனர் A.R.முருகதாஸ் அனிமேஷன் படம் ஒன்றை இயக்க முயன்று கொண்டு இருந்தார் . இந்த நிலையில் சில காரணங்களால் அனிமேஷன் படமும் இப்பொழுது தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதிக்கு A.R.முருகதாஸ் ஒரு கதை சொல்லி இருக்கிறார் . நடிகர் விக்ரமை பொறுத்த வரையில் அவரது கோப்ரா , பொன்னியின் செல்வன் , துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது . மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படமும் , கமலஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஒரு படம் நடிக்க இருக்கிறார் .

விஜய் சேதுபதியும் பல மொழிகளில் பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார் . இந்த நிலையில் A.R.முருகதாஸுக்கு இருவரில் யார் முதலில் வாய்ப்பு கொடுக்க போகிறாள்கள் என்று கேள்வி உருவாகி இருக்கிறது . இதற்கிடையில் காக்காமுட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க உள்ளதாகும் செய்திகள் சில வாரங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது .

Share.