இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார் .
2015-ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .நடிகர் விஷ்ணு விஷால் ,மியா ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . ஹிப் ஹாப் தமிழன் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை எடுத்து முடித்துள்ளார் .
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் .இந்த படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது . மேலும் இந்த படம் இந்த வருடத்தின் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமார் அடுத்து இயக்கும் படம் பற்றின தகவல் வெளியாக இருக்கிறது . நடிகர் சூர்யாவை வைத்து அறிவியல் புனைவு படம் ஒன்றினை இயக்க உள்ளார் . ஏ.ஆர்.ரகுமான் அந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் .
70 வருடம் முன்பு நடக்க இருக்கும் கதையாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது . இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது . வாடிவாசல் படத்திற்கு பிறகு சூர்யா இந்த படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது .