கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா ? உண்மையான விவரம் என்ன ?
November 28, 2022 / 09:52 PM IST
|Follow Us
இது என்ன மாயம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாணக்காயிதம் .இந்த படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன் . செல்வராகவன் இந்த படத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது
தற்போது கீர்த்தி சுரேஷ் வாஷி ,மாமன்னன் , தசரா ,போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் . அதில் மாமன்னன் என்ற படம் மட்டும் தமிழ் படம் . மாமன்னன் படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண பற்றின வதந்தி அடிக்கடி சமூக வலைதளத்தில் உலா வருவது வழக்கம் . அந்த வகையில் தற்போது மீண்டும் திருமண தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது .
கீர்த்தி சுரேசுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து விட்டதாகவும், கீர்த்தி சுரேஷும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் மேலும் திருமணம் முடிவான காரணத்தினாலேயே திருநெல்வேலி அருகே உள்ள தனது பூர்வீக வீட்டுக்கும், அங்குள்ள கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் திருமணத்தை பற்றின தகவலை உறுதிப்படுத்தவில்லை.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus