மதுரையை மையமாக வைத்து கதை தயார் செய்யும் பா.ரஞ்சித்

நடிகர் கமல் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . வருகின்ற ஜூன் 03 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது . இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் , மற்றும்
பா .ரஞ்சித் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் பா .ரஞ்சித் நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக தெரிவித்தார். நடிகர் கமல் நடித்த விருமாண்டி படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் . மேலும் நீண்ட நாட்களாக மதுரை களத்தில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது என்று கூறினார் . உடனே விழாவை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி நடிகர் கமலை நீண்ட நாட்களுக்கு பிறகு வேஷ்டி மற்றும் சட்டையுடன் பார்க்கப்போகிறோம் என்றார் உடனே ரஞ்சித் மதுரையில் கோட் சூட் போட்டுக்கொண்டு கூட நடிக்கலாம் என்றார் .

இயக்குனர் ரஞ்சித் தற்பொழுது நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் . இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமலை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.