மீண்டும் காமெடியன் அவதாரம் எடுப்பாரா சந்தானம்?

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கிய திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். சந்தானம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சந்தானம், ஆர்யா, சித்ரா லட்சுமணன் ஆகியோரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சந்தானம் சமீப காலமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு மீண்டும் நகைச்சுவை பாத்திரத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த கதையில் சந்தானத்தை இரண்டாவது நாயகனாக மாற்றிவிடலாம் என்ற முடிவில் இயக்குனர் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Share.