சிம்புக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் நடிகை !

சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் வலிமை படம் குறித்து இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் பாதித்து விட்டது. அஜித் ரசிகர்கள் இவரை இணையத்தில் வறுத்து எடுத்தனர்.

இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி. எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் சிம்பு. இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு.நடிகர்.

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே’ என தன் தந்தையிடம் கூறியுள்ளார்.

நடிகர் சிம்பு இப்போ தான் சர்ச்சை எதுவும் இல்லாம, நிம்மதியா இருக்காரு. அது உங்களுக்கு பிடிக்கலையா ? பேமஸ் ஆக எவ்வளவோ வழி இருக்கு. ஒருத்தரை டேமேஜ் பண்ணி தான் பேமஸ் ஆகணுமா? என கண்டமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர் சிம்புவின் இரசிகர்கள்.

 

Share.