விரைவில் வெந்து தணிந்தது காடுக்கு முற்றுப்புள்ளி !

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக மிக விரைவில் முடிவடைய உள்ளது.

சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நிறைவு செய்த சிம்பு வெந்த தணிந்தது காடு படத்திற்கு பிறகு நடிக்கும் பத்து தல படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் உடல் எடையை அதிகரித்த பின் பத்து தல படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.பத்து தல படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கவுதம் கார்த்திக் இப்படத்தில் முக்கியமான‌ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Share.