உண்மையை உடைத்த சுதா கொங்கரா ! சோகத்தில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவிற்கு துரோகி என்ற படம் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும் இவர் இரண்டாவதாக இயக்கிய இறுதிச்சுற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து இவர் இயக்கிய சூரரைப்போற்று திரைப்படமும் மெகா ஹிட் ஆனது . இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா தற்பொழுது சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கை உருவாக்க உள்ளார் இந்த படத்தில் அக்‌ஷய் குமார் சூரிய நடித்த நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா என்ற நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கு உள்ளதாகவும் , சிம்புவை வைத்து படம் இயக்க இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது . நடிகர் அஜித்தை பொறுத்தவரையில் அவரது வலிமை படம் தற்பொழுது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது .இதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் .

இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

நடிகர் சிம்புவை பொறுத்த வரையில் தற்பொழுது கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த கொண்டு இருக்கிறார் . மேலும் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் நடிக்கிறார் .இதனை தொடர்ந்து கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார் .

இந்த நிலையில் இயக்குனர் சுதா விகடன் அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து படம் இயக்க போகிறீர்களா என்ற கேள்விக்கு இல்லை என் தெரிவித்துள்ளார் . இதனால் இணையத்தில் பரவிய தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது .

Share.