தமிழ் சினிமாவில் 80-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னடம் உள்ளிட்ட மொழிளில் இவர் முத்திரை பதித்துள்ளார். இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல திறமைகளை தனதாக்கியவர் நடிகை ரேவதி.
1983-ஆம் ஆண்டு வெளியான மண் வாசனை என்கிற படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இயக்குனர் பாரதிராஜா இவரை சினிமாவில் அறிமுகம் செய்தார். அதன் வைதேகி காத்திருந்தால், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, ஆண் பாவம், மௌன ராகம், தேவர் மகன் உட்பட பல வெற்றி படங்களில் நடித்து அசத்தினார்.
ஆனால் இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சினிமா மீது ஆர்வம் இல்லாதவராய் இருந்தார். ரேவதி பள்ளிக்கு போகும் இவரை பார்த்த பாரதிராஜா இவரை படத்தில் நடிக்க வைத்துள்ளார். இவரது உண்மையான பெயர் ஆஷா. பாரதிராஜா தான் ஆஷா என்கிற பெயரை மாற்றி ரேவதி என பெயர் வைத்தார்.