சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரேவதி. ரேவதி ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் ‘மண் வாசனை’. இந்த படத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரேவதியின் நடிப்புக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டனர். இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
‘மண் வாசனை’ படத்துக்கு பிறகு நடிகை ரேவதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, உதயகீதம், பகல் நிலவு, குங்குமச்சிமிழ், ஆண் பாவம், மௌன ராகம், புன்னகை மன்னன், அரங்கேற்ற வேளை, கிழக்கு வாசல், அஞ்சலி, தேவர் மகன், மறுபடியும், புதிய முகம், மகளிர் மட்டும், அவதாரம், இருவர்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
அதன் பிறகு முக்கிய ரோலில் ‘தமிழன், பொன்னியின் செல்வன், கண்ட நாள் முதல், ஒஸ்தி, அம்மா கணக்கு, ப.பாண்டி, குலேபகாவலி, ஜாக்பாட்’ போன்ற படங்களில் நடித்தார். நடிகை ரேவதி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது ‘நவரசா’ என்ற தமிழ் ஆந்தாலஜி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் ரேவதி. இவ்வெப் சீரிஸ் வருகிற ஆகஸ்ட் மாதம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 8-ஆம் தேதி) நடிகை ரேவதியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ரேவதியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

