துணிவு படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல் ! ஏமாற்றத்தில் ரசிகர்கள் !!
October 27, 2022 / 11:35 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .
இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆக்ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தின் தலைப்பு ” துணிவு ” என்று படக்குழு அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர் . இந்நிலையில் நடிகர் அஜித் நடித்து வந்த தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது .
இந்நிலையில் துணிவு படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஏற்கனவே 2023 பொங்கல் தினத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படம் வெளியாக உள்ளது என்று வாரிசு படக்குழு அறிவித்து இருந்தது . எனவே நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்கள் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது துணிவு படத்தில் vfx பணிகள் அதிகம் உள்ளதால் இதை முழுவதுமாக முடிக்க மூன்று மாத காலம் மிகவும் குறைவு என்று இயக்குனர் எச். வினோத் தெரிவித்துள்ளார் இதனால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தான் உறுதியான படத்தின் வெளியீட்டு தேதி தெரிய வரும் என்று கூறப்படுகிறது . மேலும் துணிவு படம் பொங்கல் தினத்தில் வெளியாகாமல் போக வாய்ப்பு இருக்கு என்றும் கூறப்படுகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.