ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘ஜகமே தந்திரம்’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஷாலுடன் தான். அது தான் ‘ஆக்ஷன்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை விடியாதா’ என இரண்டு தமிழ் படங்கள் இணைந்தது.

இவ்விரண்டு படங்களும் OTT தளத்தில் ரிலீஸானது. இப்போது ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் தமிழில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, ஆர்யாவின் ‘கேப்டன்’, விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு படமும், மலையாள மொழியில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.