ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வந்தது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. இந்த படம் நேற்று (செப்டம்பர் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

மேலும், மதுபாலா, சமுத்திரக்கனி, அரவிந்த் சாமி, நாசர், தம்பி இராமையா, பூர்ணா, ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Share.