• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • July 7, 2023 / 12:43 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஃபர்ஹானா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், ஃபர்ஹானா’ என 5 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ஃபர்ஹானா’ படம் கடந்த மே 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை ஜூலை 7-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.டக்கர் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘டக்கர், இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘டக்கர்’ திரைப்படம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கப்பல்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கியுள்ளார். இதில் சித்தார்த்திற்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், RJ விக்னேஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார், வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கெளதம் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை ஜூலை 7-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், Mr.X’ என இரண்டு படங்களும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் கடந்த ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரபு, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், தமிழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தை ஜூலை 7-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’-ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.குட் நைட் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் நடித்த ‘குட் நைட்’ திரைப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் இந்த வாரம் ஜூலை 3-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’-ல் ரிலீஸானது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #farhana
  • #july 7 ott release tamil movies list
  • #Takkar’

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 6 நாட்களில் சித்தார்த்தின் ‘டக்கர்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 6 நாட்களில் சித்தார்த்தின் ‘டக்கர்’ செய்த வசூல் இவ்ளோவா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version