தோட்டா தெறிக்க தெறிக்க வெளியான விக்ரம் படத்தின் வீடியோ !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்திற்கு ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . வருகின்ற மே 11-ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் விக்ரம் படக்குழு படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தும் முயற்சியில் உள்ளனர் . பேன் இந்திய படமாக இந்த படம் உள்ளதால் படத்தினை வெளியாகும் அனைத்து மொழிகளிலும் விளம்பர படுத்தி வருகின்றனர் படக்குழுவினர் . படம் வெளியாக இன்னும் 25 நாட்களே இருக்கிறது. இதை தெரியப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளது படக்குழு . அந்த வீடியோ தற்பொழுது அனைவரலாம் பகிரப்பட்டு வருகிறது .

Share.