‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் காளி வெங்கட் வெளியிட்ட உருக்கமான வீடியோ!
May 25, 2021 / 09:48 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் காளி வெங்கட். இவர் ‘தடையறத் தாக்க, வாயை மூடி பேசவும், தெகிடி, முண்டாசுப்பட்டி, மாரி, இறுதிச்சுற்று, தெறி, ராஜா மந்திரி, கொடி, மரகத நாணயம், மெர்சல், இரும்புத்திரை, ராட்சசன், சூரரைப் போற்று’ போன்ற பல படங்களில் மிக முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது, அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் காளி வெங்கட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “வணக்கம்.நான் காளி வெங்கட் பேசுறேன். நானும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 22 நாள் எல்லா symptoms-வும் இருந்துச்சு. பின், ரொம்ப சீரியஸாகி அட்மிட் ஆக வேண்டிய சூழ்நிலையில் எங்கயுமே எனக்கு bed கிடைக்கல. என்னோட நண்பர் டாக்டர்.முருகேஷ் பாபு தான் ஆரம்பத்துல இருந்தே எனக்கு guide பண்ணாரு. அவர் சொன்னது எல்லாத்தையுமே follow பண்ணேன். அவர் கொடுத்த medicines சாப்பிட்டேன்.
இதுல experience-ஆ என்ன சொல்ல வந்தேன் அப்படின்னா, முதலில் நீங்க வராம பாதுகாத்துக் கொள்ளனும், அது தான் முக்கியம். அப்படி வந்துடுச்சுனா, பதட்டமாக கூடாது. எனக்கு வந்து எப்படியும் இதை வென்றே தீருவேன்ங்குற நம்பிக்கைல நான் இல்ல. என்னோட மனநிலை என்னவா இருந்துச்சுன்னா, வந்திருச்சு இனிமேல் புலம்பி ஒன்னும் ஆகப்போறது இல்ல, இனி medicine என்ன செய்யுதுன்னு பார்க்கலாம்ங்குற முடிவுக்கு வந்துட்டேன்.
அது உள்ளுக்குள்ள என்ன பண்ணுதுன்னு நான் realise பண்ணிட்டே இருந்தேன். நான் பதட்டம் ஆகல, ஏன்னா பதட்டமாகி பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக recover ஆகி வந்துட்டேன். வராம பாதுகாத்துக்குங்க, safe-ஆ இருங்க.. அப்படி வந்திருச்சுன்னாலும் பதட்டப்படாதீங்க. முக்கியமா அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க. உடனே டாக்டரை போய் பார்த்திருங்க.. டாக்டர் என்ன சொல்றாரோ, அதை கேளுங்க. அது மட்டும் தான் இதுக்கு தீர்வு” என்று கூறியுள்ளார்.