காப்பான் படத்தின் ஹிந்தி உரிமத்தின் விலை இத்தனை கோடியா ?

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் காப்பான் . இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து இருந்தார் ,மோகன் லால் , ஆர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .ஆயிஷா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் .லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்து இருந்தார் .இந்த படத்திற்கு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது .

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 80 கோடி , படத்தினை விளம்பரப்படுத்த செய்த செலவு இரண்டு கோடி, படத்தை விநியோகம் செய்த செலுவு 1 கோடி என்று செலவு செய்துள்ளனர் .தமிழ்நாடு திரையரங்கு உரிமையை 22 கோடிக்கும் , கேரளா திரையரங்கு உரிமத்தை 2.50 கோடிக்கும் ,கர்நாடகா திரையரங்கு உரிமத்தை 2.75 கோடிக்கும் ,ஓவர்சீஸ் திரையரங்கு உரிமத்தை 12 கோடிக்கும் , ஆந்திரா மற்றும் தெலுங்கானா திரையரங்கு உரிமத்தை 6.50 கோடிக்கும் விற்று உள்ளனர் .

இந்நிலையில் காப்பான் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இருந்தாலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் நிலவரம் இருந்தது . நடிகர் சூர்யாவின் படத்திற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது . இந்த காரணத்தினால் காப்பான் படம் 100 கோடி வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது .

இந்நிலையில் இந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் 2.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது .காப்பான் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை 12 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Share.