கலகத் தலைவன் ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படத்தை மகிழ் திருமேனி எழுதி இயக்கி உள்ளார் . ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரின் கீழ் உதயநிதி ஸ்டாலினால் தயாரிக்கப்பட்டுள்ளது இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரேல்லி, ஒளிப்பதிவை கே.தில்ராஜ் மற்றும் படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் செய்துள்ளனர் .
தடையற தாக்க, மீகாமன் மற்றும் தடம் படங்களுக்குப் பிறகு என்.பி.ஸ்ரீகாந்த் மற்றும் மகிழ் திருமேனி இணைந்து பணியாற்றிய நான்காவது படமாகும். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருந்தது .
மேலும் தமிழக முதல்வர் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார் . இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள கலகத்தலைவன் படம் ரசிகர்களிடம் பெரும்பான்மையான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் கலகத் தலைவன் படம் வெளியான முதல் 7 நாளில் 4.85 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது .
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus