உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
August 9, 2023 / 01:09 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். உதயநிதி தயாரிப்பாளராக களமிறங்கிய முதல் படத்திலேயே ஹீரோ விஜய் தான். அது தான் ‘குருவி. தரணி இயக்கியிருந்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்தார்.
‘குருவி’ படத்துக்கு பிறகு ‘ஆதவன், மன்மதன் அம்பு, 7-ஆம் அறிவு’ ஆகிய படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின். இதில் ‘ஆதவன்’ படத்தில் கெஸ்ட் ரோலில் உதயநிதி வலம் வந்தார். அதன் பிறகு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், கண்ணை நம்பாதே, மாமன்னன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) ரிலீஸான தமிழ் படம் ‘வீட்ல விசேஷம்’. இதில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்ததுடன், அவரே NJ.சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கவும் செய்திருந்தார். ஆனால், ‘பதாய் ஹோ’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்கான இதில் நடிக்க வைக்க வேண்டுமென இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதலில் உதயநிதி ஸ்டாலினை தான் அணுகினாராம். பின், உதயநிதி காமெடி படங்களில் தான் இப்போது நடிக்க விரும்புவது இல்லை என்று குறிப்பிட்டு நோ சொல்லி விட்டாராம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.