கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்தின் டைட்டில் இதுதானா?
September 18, 2020 / 08:14 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் இருவருடன் இணைந்து படம் ஒன்றை இயக்க போவதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், இன்று காலை இந்த வதந்தி குறித்து விரைவில் செய்து அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள்.
தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “எவனென்று நினைத்தாய்” என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகவும் தற்போது அதிகாரபூர்வமான தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
ஆனால் புதிய தகவல் என்னவென்றால் எவனென்று நினைத்தாய் என்பது டேக் லைன் தான் என்றும் இந்த படத்தின் டைட்டில் “குரு” என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குனர் விரைவில் வெளியிடுவார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.